இரண்டாம் நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்... ரிசர்வ் வங்கி அறிவிப்பால் முதலீட்டாளர்கள் உற்சாகம்!

காளையின் பிடியில் பங்குச்சந்தை
காளையின் பிடியில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை வர்த்தகத்தின் வார இறுதி நாளான வெள்ளியன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவுற்றன.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் அறிவிப்பு ஆகியவை, இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய உயர்வுக்கு காரணமாயின.

நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 364புள்ளிகள் உயர்ந்து 65,995-ல் நிலைத்தது. இதுவே நாளின் உச்ச அளவாக 464 புள்ளிகள் உயர்ந்து 66,095 புள்ளிகளை எட்டியது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 107 புள்ளிகள் உயர்ந்து 19,653 என்பதில் முடிவுற்றது.

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை

பங்குச்சந்தைகளின் இந்த உயர்வுக்கு பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன்,இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் காரணமாயின. மாறாக ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை பின்தங்கிய நிலையில் தொடர்ந்தன.

முதலீட்டாளர்களின் உற்சாக போக்குக்கு, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்ற அறிவிப்பும் முக்கிய காரணமானது. பங்குச்சந்தையின் பாஸிடிவ் போக்கு இன்று இரண்டாவது நாளாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in