பணம் பார்க்க பங்குச்சந்தைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்... ஒரே மாதத்தில் எகிறிய 47 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை வர்த்தகம்
பங்குச்சந்தை வர்த்தகம்

பங்குச்சந்தையில் வலது கால் வைக்கும் புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில், இந்தியர்கள் இந்த ஜனவரியில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தைகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக விளங்கி வருகிறது. பொருளாதாரம், தொழில்நுட்பம் என சகல துறைகளிலும் வளரும் தேசம், பெரும் மனிதவளம், கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் என இந்தியாவின் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யவும், அவற்றிலிருந்து லாபம் பார்க்கவும் திரளான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் குவிகிறார்கள். ஆனால் இந்தியாவின் மக்கள்தொகை உடன் ஒப்பிடுகையில் பங்குச்சந்தையில் பங்கேற்கும் இந்தியர்களின் விகிதம் குறைவாக இருந்து வந்தது.

பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்
பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்

மாறாக இந்த வருடத்தின் தொடக்கமே ஆரோக்கியமான அறிகுறிகளை காட்டுகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 46.84 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் வலது கால் வைத்திருக்கிறார்கள். இது கடந்தாண்டின் வருகையோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 2 மடங்காகும். இந்த ஆண்டின் தொடக்கத்தை வரலாற்று உச்சத்துடன் வரவேற்ற பங்குச்சந்தைகள், அதன் பிறகு தேக்கமடைந்த நிலையில் போக்குகாட்டி வருகின்றன. ஆனபோதும் முதலீட்டாளர்கள் குவியும் போக்கு அதிகரித்துள்ளது.

டெபாசிட்டரி தரவுகளின்படி, ஜனவரியில் மொத்தம் 46.84 லட்சத்தும் டீமேட் கணக்குகள் திறக்கப்பட்டன. இதுவே டிசம்பரில் 40.94 லட்சமாகவும், கடந்த 2023 ஜனவரியில் 21.90 லட்சமாகவும் இருந்தது. மொத்த டீமேட் எண்ணிக்கை 14.39 கோடியைத் தாண்டியுள்ளது. இது டிசம்பரை விட 3.4 சதவீதமும், கடந்த வருடத்தைவிட 30.3 சதவீதமும் அதிகமாகும். இந்த புள்ளிவிவரங்களின் பின்னணி பல ஆரோக்கிய தகவல்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் பல்துறை கட்டமைப்பு மீதான நேர்மறை தாக்கம், உலக நாடுகள் பொருளாதார சரிவை நோக்கியிருந்தபோதும் இந்தியா ஏறுமுகம் கண்டிருப்பது, மூன்றாம் முறையாக ஒரே கட்சி ஆட்சியை தொடர்வதற்கான அமோக வாய்ப்புகள், அதற்கு நம்பிக்கை சேர்க்கும் அரசின் அறிவிப்புகள், இந்தியர்கள் மத்தியிலான அதிகரிக்கும் பங்குச்சந்தை விழிப்புணர்வு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். வளர்ந்த நகரங்களுக்கு அப்பால் 2 மற்றும் 3ம் கட்ட நகரங்களில் இருந்து அதிகமான டீமேட் கணக்குகள் குவிந்து வருகின்றன. சந்தையின் புதிய உச்சத்தை முன்னிட்டு, பணம் பார்க்கும் முன்னோடிகள் பரப்பும் தகவல்களும் சாமானியர்களை பங்குச்சந்தைக்கு இழுத்துள்ளது.

பங்குச்சந்தை லாபம்
பங்குச்சந்தை லாபம்

ஆனால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது அதில் நுழைந்து லாபம் பார்க்க முனைவது மிகவும் ஆபத்தானது. நீண்டகால முதலீட்டாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும், அனுபவம் சேகரிப்பதுமே நல்லது. சந்தையின் சரிவின்போது முதலீடு செய்வதே அனுபவஸ்தர்களின் போக்காக இருக்கும். முக்கியமாக, பங்குச்சதை தொடர்பான முதலீட்டு யோசனைகளை துறை சார்ந்த, பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் உதவியுடன் மேற்கொள்வதே புதியவர்களுக்கு நல்லது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in