மனைவி சுனிதாவுக்கு அரசியலில் பெரிதாக ஆர்வமில்லை... அர்விந்த் கேஜ்ரிவால் வெளிப்படை

அர்விந்த் கேஜ்ரிவால் - சுனிதா கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால் - சுனிதா கேஜ்ரிவால்

என் மனைவி சுனிதாவுக்கு அரசியலில் ஆர்வமில்லை; எதிர்காலத்திலும் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணை அலைக்கழிப்பு மற்றும் கைதுக்கு ஆளானது போது, அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் சீற்றத்துடன் வெளிப்பட்டார். சிறையிலிருக்கும் கணவரின் குரலை கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எதிரொலித்தார். கேஜ்ரிவாலின் கடிதத்தை வாசித்து வீடியோ வெளியிட்டார். சிறையில் கேஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக கொதித்தார். கேஜ்ரிவால் கைதுக்கு எதிராகவும், பாஜக அடக்குமுறைக்கு எதிராகவும் இந்தியா கூட்டணி சார்பிலான பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.

சுனிதா கேஜ்ரிவால்
சுனிதா கேஜ்ரிவால்

அப்போது பாஜக கொடுத்த நெருக்கடியில், அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கேஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, சுனிதா கேஜ்ரிவாலே பதிலானார். அந்தளவுக்கு பொதுவெளியிலும், கட்சியினர் மத்தியிலும் சுனிதா பிரபலமாகி இருந்தார். கேஜ்ரிவால் போலவே ஆட்சிப்பணியில் இருந்து ராஜினாமா செய்த சுனிதாவுக்கு, சமூகப் பணியிலும் ஆர்வமுண்டு. இதற்கு உதாரணமாக பல சம்பவங்களையும் அவர் கடந்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில் சுனிதா கேஜ்ரிவால் நேரடி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு இன்று அர்விந்த் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். ”எனது மனைவி சுனிதாவுக்கு அரசியலில் பெரிதாக ஆர்வமில்லை. அதனால் அவர் நேரடி அரசியலுக்கோ, தேர்தலில் போட்டியிடவோ முன்வரமாட்டார்” என்று தெரிவித்துள்ளார். கூடவே மனைவி குறித்து மெச்சியும் உள்ளார். ”எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், சுனிதா எனக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் போன்ற ஒரு துணையை பெற்றதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். என்னைப் போன்ற ஒரு விசித்திரமான நபரை சகித்துக்கொள்வது எளிதானதும் அல்ல" என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மனைவி சுனிதாவுடன் அர்விந்த் கேஜ்ரிவால்
மனைவி சுனிதாவுடன் அர்விந்த் கேஜ்ரிவால்

அரசியலில் ஆர்வமில்லாதபோதும், சமூகப் பணிகளில் இயல்பாகவே ஆர்வமுடையவர் சுனிதா கேஜ்ரிவால். கேஜ்ரிவால் அரசியலுக்கு வரும் முன்னரே சுனிதா அத்தகைய பணிகளில் ஆர்வமாக இருந்தார். 2000-ம் ஆண்டு வருமான வரித்துறை கமிஷனராக இருந்து விடுப்பு எடுத்து டெல்லியின் குடிசைப் பகுதிகளில் பணிபுரிந்ததையும், சமூகப் பணிகளில் முழு நேரத்தையும் அர்ப்பணிப்பதற்காக ராஜினாமா செய்ததையும் கேஜ்ரிவால் நினைவு கூர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in