தகாத உறவால் தடம் மாறிய வாழ்க்கை... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

தற்கொலை செய்து கொண்ட மகேஷ்.
தற்கொலை செய்து கொண்ட மகேஷ்.

தகாத உறவின் காரணமாக கணவர், 2 குழந்தைகளை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், போக்குவரத்து காவலருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹூப்ளி மாவட்டம் நவநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் ( 42). இவர் தார்வார் வித்யாகிரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி(30) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டது. விஜயலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது கணவர், குழந்தைகளை விட்டு விஜயலட்சுமி, மகேஷூடன் வந்து விட்டார். இதனால் நவ்நகரில் ஒரு வாடகை வீட்டில் மகேஷ், விஜயலட்சுமி வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் வசித்து வந்த வீடு பூட்டிக் கிடந்தது. இந்நிலையில், நேற்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஹூப்ளி ஏபிஎம்சி நவநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார், மகேஷின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் அழுகிய நிலையில் மகேசும், விஜயலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, விஜயலட்சுமி, மகேஷின் தகாத உறவுக்கு இரண்டு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in