அதிகரிக்கும் கோடைக்கால நோய்கள்... சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க இணையதள முகவரி அறிவிப்பு!

அதிகரிக்கும் கோடைக்கால நோய்கள்... சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க இணையதள முகவரி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்துள்ளதால் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கவும், பதிவு செய்யும் வகையிலும் தனி இணையதள முகவரி  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கியது முதல் கடுமையான அளவுக்கு வெப்பம் இருந்து வருகிறது பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள்  வெளியில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பநோய்கள் மிக அதிக அளவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஜுரம் மற்றும் அம்மை நோய் ஆகியவை மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்காக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் இதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நோய் தொற்று  ஏற்பட்டுள்ளவர்கள் இது குறித்து அரசுக்கு தங்கள் வீட்டில் இருந்தவாறே சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க தனி இணையதள முகவரியை அரசு அறிவித்துள்ளது. https://ihip.mohfw.gov.in/#!/ என்ற இணையதள  முகவரிக்கு சென்று பெயர், இடம், தொலைபேசி எண் மற்றும் நோய்த்தொற்று ஆகியவை குறித்து பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தொற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ள சுகாதாரத்துறை இதில் பதிவு செய்தவுடன் மருத்துவ பணியாளர்கள் தொடர்பு கொண்டு நோய் குறித்த விவரங்களை கேட்டுறிந்து அதற்குரிய சிகிச்சைகளை தொடங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in