இந்த துப்பாக்கி விலங்குகளை கொல்லாது... ஆனால் விரட்டும்!- விவசாயி அசத்தல் கண்டுபிடிப்பு

துப்பாக்கியுடன் சுடலை
துப்பாக்கியுடன் சுடலை

தென்காசி  ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட தனது  சொந்த முயற்சியில் துப்பாக்கி போன்ற கருவியை தயாரித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்களின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கக்கூடியது விவசாயம். தென்காசி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் விவசாயத்தை நம்பியே  தங்களது குடும்பங்களை நடத்தி வரும் நிலையில், வனவிலங்குகளால் கடும் சேதத்துக்கு விவசாயம் உள்ளாகி விவசாயிகள் அவதிப்பட்டு  வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், குரங்குகள் உள்ளிட்டவைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், வனவிலங்குகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்களாகவே கற்களை  எறிந்தும், ஒலி எழுப்பியும் வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

குற்றாலம் ஐந்தருவி பகுதியை சேர்ந்த சுடலை என்ற விவசாயி, விலங்குகளை விரட்ட புது விதமாக சிந்தித்து துப்பாக்கி போன்ற கருவியை உருவாக்கியுள்ளார். தனது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கேஸ் லைட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இதை தயாரித்து உள்ளார். அதில் கற்கள், பேப்பர், மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி,  அதை வைத்து குரங்குகளை விரட்டும் முயற்சியில்  ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அதிக தூரத்தில் உள்ள வனவிலங்குகளை எளிதாக விரட்ட முடிகிறது. இதனால் விலங்குகளுக்கு எந்த விதமான உயிர் ஆபத்தும் வருவதில்லை. தூரத்தில் இருந்தபடியே விலங்குகளை விரட்ட முடிவதால்  இது அவருக்கு மிகுந்த பயனைத் தருகிறது. விவசாயியின் இந்த முயற்சியானது அப்பகுதி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. விஞ்ஞானிகளை மிஞ்சிய விவசாயி என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in