தீபாவளி முடிந்து ஊர் திரும்பும் பயணிகளுக்கு நற்செய்தி! மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை
நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை

தீபாவளி முடிந்து ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் மீண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்புவதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை
நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை

வருகிற 14-ஆம் தேதி இந்த ரயில் காலை 9 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லை பிற்பகல் ஒரு மணிக்கு அடைகிறது. மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கோவையை மாலை 5.30 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் முன்பதிவு வசதி இல்லாத 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை
நவம்பர் 14ம் தேதி கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை

இந்த ரயில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in