திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தீபாவளி ஆஸ்தானம் நடைபெறுவதையெட்டி அனைத்து ஆர்ஜித மற்றும் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை உலக முழுவதும் மக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறனர். இன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடாசலபதி சந்நிதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு, மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்பு அங்குள்ள பக்தர்களுக்கு தைலம் விநியோகம் செய்யப்பட்டது.

தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெற்றது. பின்பு தங்க வாயில் முன் ஏற்பாடு செய்த சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வர். இவற்றோடு ஜீயர் சுவாமி, பட்டு வஸ்திரங்களை வெள்ளித் தட்டில் கொண்டு வர, உடன் தேவஸ்தான அதிகாரிகளும் மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கொடிமரத்தைச் சுற்றி வந்து ஆனந்த நிலைய விமானத்தை சுற்றி சமர்ப்பிப்பார்கள்.

தீபாவளி பண்டிகையன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்படுவது வாடிக்கை. எனவேதான் இன்றைக்கும் தீபாவளி பண்டிகை நாட்களில் அதிரசம் செய்வது வழக்கமாக உள்ளது. தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமலை ஏழுமலையான் கோவிலில் குவிந்துள்ளனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in