தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

அமலாபால்- விஜய்
அமலாபால்- விஜய்

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வது போலவே அவர்களின் விவாகரத்தும் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக கவனத்திற்குள்ளாகிறது. அதிலும் மூன்றாவது நபர்கள் தலையீட்டால் காதல் ஜோடிகளுக்குள் பிரிவு என்பதுதான் சமீபத்தில் பிரிந்த காதல் ஜோடிகளின் கதையாக இருக்கிறது. அப்படி பிரிந்த சினிமா பிரபலங்கள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

சமந்தா- நாகசைதன்யா: 

திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் நிஜ வாழ்விலும் ஒன்றாக இணைந்தது சமந்தா-நாகசைதன்யா ஜோடி. கடந்த 2017ல் இவர்களது திருமணம் இந்து-கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. திருமண வாழ்வு நன்றாக போய்க் கொண்டிருந்த சமயத்தில்தான் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, இந்த ஜோடி கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தது.

இவர்களது திருமண முறிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஒப்பனையாளர் ப்ரீதம் ஜூல்கருடன் தொடர்பில் இருந்தது என சொல்லப்படுகிறது. ஆனால், சமந்தா தனக்கு சகோதரி போன்றவர் என்கிறார் ப்ரீதம்.

தனுஷ்-ஐஸ்வர்யா:

தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி கடந்த 2004ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் யாத்ரா-லிங்கா என்ற இருமகன்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை, விவாகரத்து செய்யப் போகிறார்கள் என செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால், இன்னும் இவர்களுக்குள் விவாகரத்து நடக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவர்களது பிரிவுக்குக் காரணம் ஸ்ருதி ஹாசன் தான் எனவும் கிசுகிசுக்கிறது கோலிவுட்.

அமலாபால்-விஜய்:

நடிகை அமலாபால்- இயக்குநர் விஜய் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தனர். ஆனால், திருமணம் ஆன மூன்றே வருடங்களில் பிரிந்தது இந்த ஜோடி. இப்போது அமலாபால்-விஜய் இருவருமே வேறொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது விவாகரத்திற்கு காரணம் தனுஷ்தான் என விஜயின் அப்பா அப்போது கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதை அமலாபால் மறுத்தார்.

பிரபுதேவா-நயன்தாரா: 

நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட பிரபுதேவாவுக்கும் லதாவுக்கும் கடந்த 1995ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வளர்ந்த மகன்கள் இருக்கும் நிலையில் (ஒரு மகன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்) இருவருக்கும் இடையில் நயன்தாரா வந்தார். கடந்த 2009ம் ஆண்டில் நயன்தாராவுடன் பிரபுதேவா காதலில் இருக்கிறார் என செய்திகள் வந்ததும் பிரபுதேவா-லதா தம்பதிகள் இடையில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த ஜோடி கடந்த 2010ம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு நயன்தாரா- பிரபுதேவா ஜோடி லிவ்வினில் வாழத்தொடங்கியது. இவர்களது திருமணத்திற்கு பிரபுதேவா ஒத்துழைக்க மறுக்க இந்த ஜோடியின் உறவும் 2012ல் முறிந்தது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in