சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்... மக்கள் கடும் அவதி!

மின்சார ரயில்
மின்சார ரயில்

சென்னையில் சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் மாநகரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த சேவை இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்குக் குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்களும் இந்த ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் இன்று காலை முதலே தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் நேரத்தில் இருந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தாமதமாக ரயில்கள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம்
சென்னை கடற்கரை ரயில் நிலையம்

இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்கள் தாமதத்தின் காரணமாக அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற குறைகளைச் சரி செய்ய ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சிக்னல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. இதனால் 20 நிமிடங்களுக்கும் மேலாக ரயில்கள் தாமதமானது. இதையடுத்து இதனை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in