இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்தச் சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம்

நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம், இரட்டை இலை சின்னம் முடங்கவும் வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கமும் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது, "எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர்  தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. தங்களை அவர் சந்திக்கவே இல்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர். 

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியைத் தவிர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் அந்தச் சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்துவிட்டு மீதம் உள்ளவர்களை ஒன்றாக  இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக்கூறும் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா இந்த லேடியா – மோடியா என்றாரே, அது போல் எடப்பாடியா – மோடியா என்று கூறுவாரா? அல்லது எடப்பாடியா – ராகுலா’ என்று அவரால் கேட்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது" என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in