ஸ்மார்ட் ஏ.சி வசதியோடு ஆட்டோவில் பயணிக்கலாம்... மதுரை ஓட்டுநரின் அசத்தல் முயற்சி!

ஆட்டோவில் ரூ.100 செலவில் ஏசி அமைத்துள்ள ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோவில் ரூ.100 செலவில் ஏசி அமைத்துள்ள ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்

ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக 100 ரூபாய் செலவில் ஓட்டுநர் ஒருவர் ஸ்மார்ட் ஏ.சி அமைத்துள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

என்னதான் சொகுசு பேருந்துகளிலும், கார்களிலும் ஏ.சி போட்டபடி பயணித்தாலும், ஆட்டோவில் பயணிப்பது ஒரு அலாதியான சுகம். காற்று வாங்கிக் கொண்டே நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றிப் பார்ப்பதற்காகவே, இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணிக்க விரும்புகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் எந்த நேரத்தில் 'பாட்ஷா' படத்தில் ஆட்டோக்காரராக நடித்தாரோ, அது முதலே ஆட்டோக்காரர்கள் எல்லோருமே தங்களை சூப்பர் ஸ்டார் கனவிலேயே சாலையில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

ஆட்டோவுடன் ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோவுடன் ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்

அந்த வகையில் உண்மையாலுமே தனது வாகனத்தை சூப்பர் ஸ்டாரின் வாகனம் போல் மாற்றுவது என முடிவு செய்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செயல், மதுரை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

என்னதான் ஆட்டோவில் காற்றோட்டமாக சென்றாலும், வெயில் காலங்களில் ஆட்டோவில் பயணிப்பது சற்று சிரமமான ஒன்றுதான். கடும் வெயில் காலங்களில் அனல் காற்று முகத்தில் மோதும். இதுவே பயணிகளுக்கு பெரும் சிரமமாக இருக்கும். இந்த சிரமத்தை போக்குவதற்காக, மதுரை பெத்தானியாபுரம் பகுதியை அடுத்த ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன் தனது ஆட்டோவில் குறைந்த விலை ஏ.சி ஒன்றை அமைத்துள்ளார்.

முதலில் ரத்னவேல் பாண்டியனை தெரிந்து கொள்ளலாம். டிப்ளமோ பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இவரது தந்தை ஈஸ்வரன் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தம்பிகள் இருவர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

குடும்பத்தில் உள்ள எல்லோருமே காக்கி உடையில் மக்கள் சேவை செய்வதால், தானும் காக்கி உடையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரத்னவேல் பாண்டியன், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வெயில் காலங்களில் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள், வெயிலின் தாக்கத்தால் வாடுவதை கண்டு மனம் வருந்திய ரத்னவேல் தனது ஆட்டோவில் ஏ.சி ஒன்றை பொருத்துவதற்காக மெக்கானிக்கை அணுகியுள்ளார்.

ஆட்டோவில் ஏ.சி பொருத்த சில லட்சம் ரூபாய் அளவிற்கு செலவாகும் என அவர்கள் தெரிவித்ததால், தயங்கிய ரத்னவேல், அந்த திட்டத்தை கைவிட்டு உள்ளார். இதையடுத்து தனது டிப்ளமோ அறிவை பயன்படுத்தி ஆட்டோவிற்குள் குளிர்ந்த காற்று ஏ.சி போல் வரும் வகையில் வடிவமைக்க முடிவு செய்துள்ளார். வெறும் நூறு ரூபாயில் தனது ஆட்டோவில் ஏ.சி ஒன்றை அமைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்

3 இன்ச் பைப் மற்றும் 2 இன்ச் பைப்புகளை ஒன்றாக இணைத்து, பைப்பின் அடியில் 100 மில்லி தண்ணீரை வைத்துள்ளார். ஆட்டோ முன்னோக்கி செல்லும்போது, 3 இன்ச் பைப்பின் வழியே காற்று உள்ளே சென்று தண்ணீரில் பட்டு, குளிர்ந்த காற்றாக 2 இன்ச் பைப் வழியாக பயணிகள் இருக்கும் பகுதிக்கு வருகிறது. இதனால் பயணிகள் வெயிலின் தாக்கம் தெரியாமல் குளிர்ந்த காற்றுடன் பயணிக்க முடியும் என ரத்னவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ரத்னவேல் பாண்டியன், இலவசமாக யாருக்கும் சவாரி செய்வதில்லை. அதே நேரம் பேரம் பேசியும் சவாரி செய்வதில்லை. நியாயமாக எவ்வளவு வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இவரது இந்த ஸ்மார்ட் ஏ.சிக்கு பயணிகள் மட்டுமின்றி, சக ஆட்டோ ஓட்டுநர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in