அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள்... இந்த கோடையில் பயணிகள் அதிகம் தேடியதில் முன்னணி இடம்!

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

’மேக் மை ட்ரிப்’ தளத்தின் தரவுகள் அடிப்படையில் இந்த கோடையில் அதிகம் தேடப்பட்ட தலங்களில் அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை முதன்மை இடம் பிடித்துள்ளன.

’மேக் மை ட்ரிப்’ தனது இணையதளம் மற்றும் செயலி வாயிலாக ஆண்டுதோறும் பதிவு செய்யப்பட்டும், சுற்றுலா தளங்களுக்கான தேடல்கள் அடிப்படையில் முன்னணி இடம் பிடித்தவை குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கோடையில் இந்தியாவின் அயோத்தி மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை முதன்மை இடம் பிடித்துள்ளன.

லட்சத்தீவு
லட்சத்தீவு

அயோத்தி, லட்சத்தீவு மற்றும் நந்தி ஹில்ஸ் ஆகியவை இந்த கோடையின் தேடல்களில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்யும் உள்நாட்டு இடங்களாகும். இவற்றுக்கு அடுத்தபடியாக கோவா வருகிறது. இந்த தரவுகள் இன்றைய தினம் மேக் மை ட்ரிப் வெளியிட்டிருக்கும் இன்போக்ராபிக் அடிப்படையிலான தரவுகளில் தெரிய வருகின்றன.

பூரி மற்றும் வாராணசி ஆகியவை இந்த கோடையில் அதிகம் தேடப்பட்ட யாத்திரை ஸ்தலங்களாக இருந்த போதும், அவற்றை தேடல் தொகுதிகளில் அயோத்தி தொடர்ந்து முறியடித்து வருகிறது. ராமர் கோயில் குடமுழுக்கு விழா சர்வதேச கவனம் பெற்றிருப்பதும், அரசியல் விவாதங்களில் தொடர்ந்து உச்சம் பெற்றிருப்பதும், பக்தர்கள் மத்தியிலான நீண்டகால தவிப்பு நிறைவேறி இருப்பதாலும் மேக் மை ட்ரிப் தலங்களின் வரிசையில் அயோத்தி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவுக்கு வெளியே லக்சம்பர்க், லங்காவி மற்றும் அன்டில்யா ஆகிய நகரங்களும் பயணிகளின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளன. மேலும் பாகு, அல்மாட்டி மற்றும் நகோயா ஆகியவையும் இந்த வரிசையில் சேரும். கடந்தாண்டு கோடையுடன் ஒப்பிடும்போது, குடும்பப் பயணப் பிரிவு 20 சதவீதம் வளர்ந்துள்ளது, அதேசமயம் தனிப் பயணம் 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

மேக் மை ட்ரிப்
மேக் மை ட்ரிப்

மேக் மை ட்ரிப் இணை நிறுவனரும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் மாகோவ் கூறுகையில், "பயண நோக்கத்தின் அடிப்படையில் கோடை காலம் எப்போதுமே ஆண்டின் முக்கியத்துவம் மிக்க காலாண்டுகளில் ஒன்றாகும். மேலும் இந்த ஆண்டும் சுற்றுலா துறையில் மிதப்பு தொடர்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேடல்களில் ஆரோக்கியமான வளர்ச்சியை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in