ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

ஏர் இண்டியா விமானம்
ஏர் இண்டியா விமானம்

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் 70 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு அவர்களின் வேலை நிறுத்தத்தால் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி இன்று அதிகாலை முதல் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏர் இந்தியா விமான சேவைகள் திடீரென முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு - டெல்லி, கோழிக்கோடு - துபாய், குவைத் - தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன. கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்ட  நிலையில், கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் உட்பட நாடு முழுவதும் சுமார் 70 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விமான பயணிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in