கைவிரித்த தயாரிப்பு நிறுவனம்; அய்யையோ... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

'விடாமுயற்சி’ அஜித்- த்ரிஷா
'விடாமுயற்சி’ அஜித்- த்ரிஷா

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், இதன் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அப்டேட் இதுவரை இல்லையாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் அதன் ஆரம்பத்தில் இருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் விலகினார். அதன் பின்பே, இயக்குநர் மகிழ்திருமேனி இந்தப் படத்துக்கு இயக்குநராக கமிட் ஆனார்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’
அஜித்தின் ‘விடாமுயற்சி’

ஆனால், படம் அறிவித்து ஒரு வருடம் ஆகியும் படத்தில் இருந்து அப்டேட் எதுவும் பெரிதாக வெளியாகவில்லை. அஜித்- ஆரவ் தொடர்பான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்ட விதம் வீடியோவாக வெளியானது. ஆனால், அதுவும் ஆக்சிடென்ட் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

அஜர்பைஜான், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதன் அடுத்த ஷெட்யூல் எப்போது என்பதுதான் இன்னும் தெரியவில்லை. இதற்கு காரணம், தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ்தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஏனெனில், தாங்கள் எதிர்பார்த்ததை விட ‘விடாமுயற்சி’ படத்தின் பட்ஜெட் இருமடங்கு அதிகமாகி விட்டதாம்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்காட்சி...
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்காட்சி...

’இதற்கு மேல் முடியாது’ என்று கைவிரித்திருக்கிறது லைகா. இதனால், அப்செட் ஆன அஜித் இந்த மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் கலந்து கொள்வேன் எனத் தெரிவித்திருக்கிறார். ’குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் கலந்து கொண்டால் அடுத்து ஐந்து மாதங்களுக்கு தேதி இல்லை என்று அஜித் சொல்லியும் லைகா அசரவில்லையாம்.

இதனால், எடுத்து முடித்த வரையில் படத்தைத் தேத்துவோம் என பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. ‘’ ‘விடாமுயற்சி’ எங்களின் கனவு படம்” என்று சொல்லிய லைகா அதை கனவாகவே முடித்துவிடுமா அல்லது காட்சிக்குக் கொண்டு வருமா என்பது அந்த நிறுவனத்துக்கே வெளிச்சம்!

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in