பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் நடந்த துயரம்; கண்ணீர் மல்க பதிவு

கம்பம் மீனா
கம்பம் மீனா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனாவின் அக்கா மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த துயரம் குறித்து கம்பம் மீனா தனது ஃபேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியின் டாப் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டிலும் நடித்து வருபவர் கம்பம் மீனா. பாக்கியலட்சுமியில் செல்வி அக்காவாக நடித்து வரும் கம்பம் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து வருகிறார்.

தெற்கத்தி பொண்ணு என்ற சீரியல் மூலம் அறிமுகமான கம்பம் மீனா, தனது வட்டார வழக்கு பேச்சுக்காக பிரபலமானவர். சீரியல்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் கம்பம் மீனா நடித்துள்ளார். ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர், தனது கடினமான உழைப்பில் முன்னுக்கு வந்துள்ளார். வாழ்வில் நிறைய சோகங்கள் இருந்தாலும், சீரியல்களிலும் திரைப்படங்களிலும் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த நிலையில் கம்பம் மீனா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சோகமான பதிவு இணையத்தில் வைரலாக வருகிறது. அதாவது, இவருடைய அக்கா மகன் 34 வயதில் மரணமடைந்து விட்டார். அந்த பிரிவை தாங்க முடியாமல் தான் கம்பம் மீனா சோகமான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் கம்பம் மீனா, ”என்னடா அவசரம். நீ தானடா காரியக்காரன்... தீஷிதனுக்கு அஞ்சு வயசு ஆகட்டும். அவன எப்படி கொண்டு வர்றேன் பாரு சித்தின்னு சொல்லி 4 நாள் தானடா ஆகுது... நீ அடுத்த தடவ வரும்போது நான் எப்படி இருக்கே பாரு சித்தின்னு சொன்னியே.... நாளே நாள்ல என்னையே வரவச்சுட்டியே பாண்டி... அய்யோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசுலயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி... நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி” என்று கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in