இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

வெளியே கிளம்பும் போது மறக்காம குடையோட கிளம்புங்க. அவசியமேற்பட்டாலொழிய வீட்டை விட்டு வெளியே கிளம்பாதீங்க. வயதானவர்களையும், குழந்தைகளையும் தனியே அனுப்பாதீங்க. இன்று வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் தமிழகத்தை ஒட்டி நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று நவம்பர் 17ம் தேதி மிதிலி புயலாக உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும். மாலத்தீவின் பரிந்துரையின்படி புயலுக்கு மிதிலி எனப் பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வங்கக்கடலில் ஏற்கெனவே 2 புயல்கள் உருவான நிலையில் 3-வது புயல் உருவாகிறது. இந்த ஆண்டின் 3-வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவது புயலாகவும் மிதிலி புயல் உருவாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in