
பிக் பாஸ் இல்லத்திற்குள் மாயாவின் முகத்திரையை விசித்ரா கிழித்தெடுக்கும் வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் பிக் பாஸ் இல்லத்திற்குள் சூடு பிடித்திருக்கிறது. மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ கேங் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு பிரதீப்பை வெளியே அனுப்பி இருக்கிறார்கள் எனவும் இவர்களை ’புல்லி கேங்’ எனவும் பெயரிட்டு இணையத்தில் இவர்களை பிக் பாஸ் பார்வையாளர்கள் திட்டி வருகின்றனர்.
வெளியே மட்டுமல்லாது, உள்ளேயும் மாயா, பூர்ணிமா கேங்குக்கு எதிராக விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ் கேங் ஒன்று கூடியுள்ளது.
இந்த நிலையில், தேவையில்லாமல் மாயா பிரதீப்பை அசிங்கப்படுத்தி அவர் மீது தவறான பிம்பம் கட்டமைத்து வெளியே அனுப்பியுள்ளதாகவும், இதே போன்று தன்னையும் நடத்தினால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன் என்று பேசியுள்ள வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து விசித்ராவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!