நிக்சனுக்கு குறும்படம் போட்டு தோலுரித்த பிக் பாஸ்... கோபத்தில் போட்டியாளர்கள்!

நிக்சன்
நிக்சன்

பிக் பாஸ் இல்லத்தில் வினுஷாவைப் பற்றி நிக்சன் சொன்ன கமென்ட்டை பிக் பாஸ் குறும்படமாக போட்டுக் காட்ட போட்டியாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் இல்லத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடந்த சில நாட்களாவே நிக்சனுக்கு எதிராக பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப் வெளியேற்றப்பட்டதில் இருந்து பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர்கள் மத்தியில் கடும் விவாதம் கிளம்பி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ ஆகியோர் பிக் பாஸிடம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றினர் என்று விசித்ரா, அர்ச்சனா, மாயாவிடம் விவாதம் செய்தனர்.

அதே சமயம், நிக்சன் ஐஷூவிடம் அத்துமீறி நடந்து கொள்வது, அக்கா என்று சொல்லிக் கொண்டே வினுஷா, பூர்ணிமாவைப் பற்றி பாடி ஷேமிங் செய்வது போன்ற விஷயங்களும் வெளியே பார்வையாளர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பி நிக்சனைதான் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என சொல்லி வந்தனர். இப்போது இதற்கு பிக் பாஸ் குறும்படம் போட்டுள்ளார்.

அதில் ஒவ்வொருவரும் இன்னொருவரைப் பற்றி பேசிய விஷயங்களை திரையில் போட்டு காண்பித்து ஏன் அப்படி பேசினார் என அனைவர் முன்னிலையிலும் விளக்கம் கொடுக்க வேண்டும். அதில் நிக்சன் வினுஷாவை பாடி ஷேமிங் செய்து ஐஷூவிடம் பேசிய விஷயம் போட்டு காண்பிக்கப்படுகிறது.

இதைப் படித்துப் பார்த்த அனைத்து பெண் போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைய, நிக்சன் அதை நான் தவறான நோக்கத்தில் பேசவில்லை என விளக்கம் கொடுக்கிறார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இந்த விஷயத்தை முன் வைத்து அடுத்து ஒரு பெரிய சர்ச்சை பிக் பாஸ் இல்லத்திற்குள் வெடிக்கும் என்பதையே இந்த புரோமோ காட்டுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in