80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

வயது குறைக்கும் ஆராய்ச்சி
வயது குறைக்கும் ஆராய்ச்சி

இந்த உலகில் மனிதர்களுக்கு மிகப்பெரிய கவலை முதுமை அடைவது. இளமையை இழக்க விரும்பாதது ஒரு காரணம் என்றால், முதுமையினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும் அச்சுறுத்துகிறது. இந்நிலையில், மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதனின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக நமது உடல் உறுப்புகளின் வயதை குறைப்பதை பற்றிய சோதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

இதற்காக அவர்கள், வயதான எலியின் மீது நடத்திய சோதனையில் 70% வெற்றி அடைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நேச்சுர் இதழியில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், "பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிக்கு செலுத்தப்பட்டது. அதில் அந்த எலியின் மரபணுவில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதயம் மற்றும் கல்லீரலின் வயது பாதியாக குறைந்துள்ளது. இந்த சோதனையை மனிதர்கள் மீது நடத்தினால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றலாம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மனிதர்கள் மீது இந்த சோதனையை நடத்தும் போது அதில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in