தானியங்கி டெஸ்லா கார்களை வி.ஆர் ஹெட்செட் அணிந்து ஓட்டும் அலட்சிய பேர்வழிகள்... அலறும் அமெரிக்க சாலைகள்

தானியங்கி டெஸ்லா கார்
தானியங்கி டெஸ்லா கார்

அமெரிக்க சாலைகளில், தானியங்கி டெஸ்லா கார்களை வி.ஆர் ஹெட்செட் அணிந்து ஓட்டும் அலட்சிய நபர்களால், புதிய அச்சுறுத்தல் பரவி வருகிறது.

நவீன தொழில்நுட்பங்கள் நடப்பு வாழ்க்கையின் சிரமங்களைக் குறைத்து, நேரத்தையும், உழைப்பையும் சேமிக்க உருவாக்கப்படுகின்றன. ஆனால் அலட்சிய நபர்கள் அந்த தொழில்நுட்பங்களை மேம்போக்கில் கையாள்வது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னோடியான தானியங்கி கார்களை தயாரித்து வழங்குகிறது. ஓட்டுநரின் தேவையின்றி சுயமாக விரும்பிய இடத்துக்கு கொண்டு செல்லும் இந்த நவீன வாகனங்கள், போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயங்கள், நேர மேலாண்மை, ஓட்டுநரின் மெனக்கிடல்கள் உள்ளிட்ட சவால்களை சமயோசிதமாக எதிர்கொள்ள உதவுகின்றன.

இந்த கார்களில் ஏறி அமர்ந்ததும் வாகனத்தை ஸ்டார்ட் செய்து, செல்லும் இடத்தை குறிப்பிட்டால் போதும். ஓட்டுநர் பெயரளவில் இருக்கையில் வீற்றிருக்க, உரிய இடத்துக்கு இலகுவாய் கொண்டுபோய் சேர்த்துவிடும். இந்த தானியங்கி வாகனங்கள் அறிமுகமாகும் போது சில விபத்துகள், தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்தன. அவற்றை முறியடித்து தற்போதும் தயாராகும் கார்கள், சாலைப் போக்குவரத்தின் அடுத்த தலைமுறைக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன.

தானாக ஓடும் வாகனம் என்ற போதும், ஓட்டுநரின் மேற்பார்வை தவிர்க்க இயலாதது. மேலும் சீரான ஓட்டத்துக்கு ஓட்டுநர் இருக்கையில் இருப்பவர் தனது இருப்பை அவ்வப்போது வாகனத்துக்கு உணர்த்துவதும் அவசியமாகிறது. தானியங்கி வாகனங்கள் 100 சதவீதம் விபத்துகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதால், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் அக்கறையும் தவிர்க்க முடியாததாகிறது.

மாறாக டெஸ்லா போன்ற தானியங்கி வாகனங்களை செலுத்துவோர், டிரைவர் இருக்கையில் இருந்தபடி முழுத்தூக்கம் போடுவது, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். இவை விபத்துக்கு வழி செய்வதுடன், சாலைகளின் உடன் பயணிப்போரின் உயிருக்கும் அச்சுறுத்தலாகின்றன.

அவ்வாறான அலட்சிய ஓட்டுநர்களை சுட்டிக்காட்டும் வகையில், சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் டெஸ்லா காரை செலுத்தும் நபர் கண்களில் விஆர் உபகரணம் அணிந்து விளையாடிபடியே விரைகிறார். ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி வரிசையிலான, ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட் அணிந்த அந்த நபர், டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி உற்சாகமாக விளையாடிபடியே செல்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அமெரிக்க போக்குவரத்து செயலர் பீட்புட்டி கீக், தானியங்கி வாகனங்களால் அமெரிக்க சாலைகளில் எழும் விபத்து அபாயங்கள் குறித்தும், ஓட்டுநருக்கு அவசியமான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். சுமார் இரண்டரை கோடி பார்வைகளை கடந்துள்ள இந்த வீடியோ, தானியங்கி வாகனங்கள் விரையும் வளர்ந்த நாடுகளுக்கு அப்பால் அதற்கான கனவில் காத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in