சீற்றத்தில் சுந்தர் பிச்சை... உள்ளிருப்பு போராட்ட ஊழியர்கள் கைது, பணிநீக்கம்; கூகுள் நிறுவனத்தில் என்னதான் நடக்கிறது?

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட ஊழியர்களை வரிசையாக பணி நீக்கம் செய்து வருகிறார் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான சுந்தர் பிச்சை.

நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டதாக கடந்த வாரம் 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சுந்தர் பிச்சை உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கூகுள் அலுவலகம்
கூகுள் அலுவலகம்

கூகுளின் 120 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் திட்டத்தை ஊழியர்கள் எதிர்த்தனர். நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கூகுள் நிறுவன அலுவலகங்களில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்புத் துறை தலைவரான கிறிஸ் ராகோவ், ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்து ஒரு குறிப்பை வெளியிட்டார். "ஊழியர்களின் இந்த நடத்தை ஏற்றுக்கொள்ள இயலாதது. நிறுவனத்தின் பணிச்சூழலை இது சீர்குலைக்கும் மற்றும் சக ஊழியர்களை அச்சுறுத்தும்" என்றார்.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் தனியாக எச்சரிக்கை வெளியிட்டார். ’நிறுவனத்திற்கு என திறந்த கலாச்சாரம் உள்ளது. அங்கு விவாதங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கும் வரம்புகள் உண்டு’ என்று ஊழியர்களை எச்சரித்தார். “எங்களிடம் திறந்த விவாதத்துக்கான கலாச்சாரம் உள்ளது. இவை அற்புதமான தயாரிப்புகளை உருவாக்கவும் சிறந்த யோசனைகளை செயலாக மாற்றவும் உதவக் கூடியது. அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

கூகுள்
கூகுள்

ஆனால், சக ஊழியர்களை சீர்குலைக்கும் வகையில் நிறுவனத்தை தனிப்பட்ட தளமாக பயன்படுத்த முயற்சிப்பதோ, அரசியல் விவாதங்களை உருவாக்குவதோ, அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக உணரும் வகையில் செயல்படுவதற்கான இடமாக மாற்ற முயல்வதோ கூடாது. அதற்கான இடம் கூகுள் அலுவலகம் அல்ல” என்று சீறியுள்ளார்.

அண்மைக்காலமாகவே கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கான அழுத்தங்கள் கூடி வருகின்றன. கூகுளின் பிரத்யேக ஏஐ மற்றும் படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு ஆளாயின. அடுத்த தலைமுறைக்கான மாற்றங்களை உள்வாங்கி செயல்படுத்துவதில் சுந்தர் பிச்சை தடுமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை அனைத்துமாக சுந்தர் பிச்சைக்கான அழுத்தங்களை அதிகரிக்க, அவர் விரைவில் மாற்றப்படுவார் என்றெல்லாம் பேச்சுக்களும் வலம் வந்தன. இவற்றின் மத்தியில், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும், அவர்கள் கைது மற்றும் பணி நீக்கத்துக்கு ஆளாவதும், கூகுள் நிறுவத்தின் சுந்தர் பிச்சையை மையமாகக் கொண்ட சர்ச்சைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in