பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்
ரஃபாவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலை நோக்கி சுமார் 35 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள சஃபெட் நகரம் மற்றும் பிற பகுதிகளில், தெற்கு லெபனானில் இருந்து செயல்படும் ஆயுத குழுவான ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து நேற்று 35 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும் இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்போ, காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பதிலடியில் தெற்கு லெபனானில் ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்சோன், ஒடைசே பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளின் இரண்டு கட்டமைப்புகளை இஸ்ரேல் தாக்கியது என்றும் அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கிடையே காசா பகுதியில் போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கிய ஒரு நாள் கழித்து, அதாவது அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பினர்
ஹிஸ்புல்லா அமைப்பினர்

அதே நேரத்தில் நேற்று, தெற்கு காசா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 18 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான டாலர் கூடுதல் ராணுவ உதவிகு ஒப்புதல் அளிக்க இருந்த நேரத்தில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in