
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் எம்ஐடி கல்வி நிறுவனம் இந்திய ராணுவம் பயன்படுத்தும் ஆளில்லாத விமானங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் அனைவரையும் அசத்தி வருகிறது.
இதுகுறித்து எம்ஐடி கல்வி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்ஐடி) உள்ள மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி மையம் ராணுவ பயன்பாட்டிற்காக தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட டிரோன்களை வடிவமைத்து தயாரிக்கிறது.அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி மூலம் சுமார் 500 ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டன.
இந்திய ராணுவம் தற்போது இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கடும் பனி, மழை மற்றும் பலத்த காற்றிலும் கூட இந்த டிரோன்களைப் பயன்படுத்த முடியும். மேலும் ஒரு கி.மீ.உயரம் வரை பார்க்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தவகை ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ ஆகும்.15 முதல் 20 கிலோ எடையுள்ள மருந்து, உணவுப் பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது" என்று தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை
உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!
மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு