ஜியோபோன் பிரைமா
ஜியோபோன் பிரைமா

2,599 ரூபாய் மட்டும் தான்: அதிரடி விலையில் ஜியோ போன் ப்ரைமா 4 ஜி!

தீபாவளி பண்டிகையையொட்டி ஜியோவின் மலிவு விலை போனான ஜியோ போன் ப்ரைமா 4ஜி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் முன்னணியில் உள்ள செல்போன் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ, செல்போன்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கெனவே 4 ஜியில் இயங்கும் 2 பேசிக் மாடல் போன்களைச் சந்தையில் விற்பனைக்கு வைத்துள்ள ஜியோ நிறுவனம் அடுத்த கட்டமாக மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களின் வசதிகளுடன் கூடிய போனை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ரூ.2,599 என விலை நிர்ணயம்
ரூ.2,599 என விலை நிர்ணயம்

இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஜியோ போன் பிரைமா செல்போனை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தற்போது 2.5 கோடி பயனாளர்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் 4ஜி சேவைக்கு மாற்றும் வகையில் இந்த புதிய போனை அறிமுகப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் செல்போன்கள் பிரிவு தலைவர் சுனில் தத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜியோ போன் ப்ரைமா விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. 2,599 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனில், வாட்ஸ் அப், யூடியூப், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் யுபிஐ அம்சங்கள் உள்ளன. 512 எம்பி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், 1800 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் கிடைக்கிறது.

ஜியோ நிறுவன சேவை மட்டுமே பயன்படுத்த முடியும்
ஜியோ நிறுவன சேவை மட்டுமே பயன்படுத்த முடியும்

சில்லறை விற்பனை கடைகளான ரிலையன்ஸ் டிஜிட்டலின், ஜியோ மார்ட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் இந்த செல்போன் கிடைக்கும். தற்போதைக்கு ஜியோ நிறுவனத்தின் சேவையை மட்டுமே இந்த செல்போனில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!

தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!

பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!

x
காமதேனு
kamadenu.hindutamil.in