வந்தாச்சு... ‘ஜியோபோன் பிரைமா 4ஜி’ முகேஷ் அம்பானியின் அதிரடி தீபாவளி பரிசு!

முகேஷ் அம்பானியின் ஜியோபோன் பிரைமா 4ஜி
முகேஷ் அம்பானியின் ஜியோபோன் பிரைமா 4ஜி

இந்த தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக முகாஷ் அம்பானி வசமிருந்து வருகிறது, ’ஜியோபோன் பிரைமா 4ஜி’ எனும் குறைந்த விலை, நிறைந்த சேவையிலான புதிய போன்.

கையைக் கடிக்காத விலையில், அடிப்படை வசதிகள் அனைத்தும் கூடிய கையடக்க போனாக, புதிய ஜியோ போன் அறிமுகமாகிறது. ’ஜியோபோன் பிரைமா 4ஜி’ போனின் அறிமுக விலை ரூ2,599 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன்களின் பிரத்யேக இயங்குதளமான ’கைஓஎஸ்’(KaiOS) அடிப்படையில் புதிய போனும் செயல்படும்.

ஜியோபோன் பிரைமா 4ஜி
ஜியோபோன் பிரைமா 4ஜி

கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் உடன் ஒப்பிடுகையில், ஓபன் ஓஎஸ் வகைமையில் வரும் ’கைஓஎஸ்’ மூலம் அதிக எண்ணிக்கையிலான செயலிகளை பயன்படுத்த முடியாது. ஆனபோதும் புதிய ஜியோபோனில் வாட்ஸ் ஆப், யூடியூப், ஃபேஸ்புக், கூகுள் மேப் உள்ளிட்ட பிரபலமான மற்றும் தவிர்க்க முடியாத செயலிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு அப்பால் ஜியோவின் பிரத்யேக ஜியோ சினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோசாட் வசதிகள் புதிய போனில் உண்டு.

512எம்பி(அரை ஜிபி) ரேம், 1800mAh பேட்டரி, 2.4 அங்குல திரை, முன் மற்றும் பின்புற கேமராக்கள் ஆகியவற்றுடன் எல்இடி டார்ச்சும் இந்த போனில் அடங்கியிருக்கும். சிங்கிள் சிம் வசதி கொண்ட இந்த போன் அதிகபட்சமக 128 ஜிபி வரையிலான மெமரி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் புளூடூத் 5.0 ஆகியவற்றுக்கு ஒத்துழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் வழங்கும் பிரத்யேக கேஷ் பேக் ஆஃபர், வங்கிகளின் ஆஃபர், ஜியோவின் அடுத்தக்கட்ட ரீசார்ஜ் கூப்பன்கள் ஆகியவையும் இதன் விற்பனைக்கு உதவ வருகின்றன.

ஜியோபோன் பிரைமா 4ஜி
ஜியோபோன் பிரைமா 4ஜி

ஜியோ 4ஜி வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஜியோபோன் பிரைமா 4ஜி, அதன் குறைந்த விலை காரணமாக கூடுதல் பயன்பாடு மற்றும் முதியவர்கள், குழந்தைகள் உபயோகத்துக்கான போனாகவும் பயன்பெறக்கூடும். தீபாவளியன்று அறிமுகமாகும் இந்த போன், ஜிமார்ட் மற்றும் ஜியோவின் அதிகாரபூர்வ தளங்கள் மற்றும் கடைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in