2ஜி, 3ஜி சேவைகளுக்கு மூடுவிழா? வலியுறுத்தும் ஜியோ; மல்லுக்கட்டும் வோடாபோன்

ஜியோ உடன் மோதும் வோடாபோன்
ஜியோ உடன் மோதும் வோடாபோன்

2ஜி மற்றும் 3ஜி தொலைத்தொடர்பு சேவைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை ஜியோ நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வோடாபோன்-ஐடியா நிறுவனம் கோரி உள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் இந்தியா 5-ம் தலைமுறைக்கான பாய்ச்சலை கண்டிருக்கிறது. அதற்கு அடியெடுத்துக் கொடுத்த ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அண்மையில் ஒரு வெடிகுண்டு வீசியது.

நாட்டில் 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவருமாறு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை ஜியோ கேட்டுக்கொண்டது. விவாதங்களை எழுப்பியிருக்கும் இந்த யோசனைக்கு, ஜியோவின் போட்டியாளர்களின் ஒன்றான வோடாபோன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2ஜி, 3ஜி தடை கோரும் ஜியோ
2ஜி, 3ஜி தடை கோரும் ஜியோ

4ஜி மற்றும் 5ஜி என இந்தியாவின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் அடுத்த கட்டத் தலைமுறை சேவைகளுக்கு நகர்ந்திருக்கையில், வரவேற்பில்லாத 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜியோ வாதிடுகிறது. இந்த ஏற்பாடு செலவின அடிப்படையிலும் சகாயம் சேர்க்கும் என்று ஜியோ விளக்கியது.

ஆனால் வோடாபோன் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை நிறுத்துவது, அவை இன்னமும் வழக்கில் இருக்கும் கிராமப்புற எளிய வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்று வாதிடுகிறது. மேலும் வணிக அடிப்படையில், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் ஏடிஎம் சேவைகளையும் இந்த ஏற்பாடு பாதிக்கச் செய்யும் என்று காரணங்களை அடுக்குகிறது வோடாபோன்.

இந்திய தொலைத்தொடர்பு துறையில், 4ஜி என்ற அதிரிபுதிரி அதிவேக இணைய சேவையுடனே ஜியோ நுழைந்தது. அதுவரை 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர் மத்தியில் இருந்தன. தற்போது தனது வணிகத்துடன் சற்றும் தொடர்பில்லாத 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை முடிவுக்கு கொண்டுவர, அதாவது அந்த வாடிக்கையாளர்களை தனது 4ஜி அல்லது 5ஜிக்கு கொண்டு வர ஜியோ விரும்புகிறது.

5ஜி சேவையில் முன்னேறும் ஜியோ
5ஜி சேவையில் முன்னேறும் ஜியோ

ஆனால், ஜியோவின் போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இன்னமும் 4ஜிக்கு முந்தைய தலைமுறை சேவைகளையும், அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துள்ளன. அதிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் உடனான போட்டியில் நொடித்துப் போயிருக்கும் வோடாபோன், 4ஜிக்கு முந்தைய சேவையில் பிணைந்திருக்கும் தனது பிரத்யேக வாடிக்கையாளர்களை இழக்க விரும்பவில்லை.

இவை தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்னமும் இறுதி முடிவினை எடுக்கவில்லை. மேலும், 4ஜிக்கு முந்தைய சேவைகளை அதிகம் வைத்திருக்கும், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்கவும் இல்லை.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in