அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

திருமணம்
திருமணம்

உத்தராகண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமா மகன், மகளை திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநில பாஜக அரசு, கடந்த 6ம் தேதி நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தது. யுசிசி மசோதா திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

புதிய விதிகளின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் அதை கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றுக்கு பொது விதிகளை யுசிசி மசோதா கொண்டுள்ளது. திருமண விதிகளை பொருத்தவரை, மணமகனுக்கு உயிருடன் இருக்கும் மனைவியோ அல்லது மணமகளுக்கு உயிருடனுள்ள கணவனோ இருக்கக்கூடாது.

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதச் சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளலாம். எந்த சடங்காக இருந்தாலும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த திருமணம் செல்லாது ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தராகண்ட் சட்டப் பேரவை கூட்டம்
உத்தராகண்ட் சட்டப் பேரவை கூட்டம்

இதேபோல் விவாகரத்தைப் பொருத்தவரை, தம்பதியரின் திருமணம் மீறிய தொடர்பு, கொடூரமாக நடந்துகொள்ளுதல், திருமணத்துக்குப் பிறகு குறைந்தது 2 ஆண்டுகள் பிரிந்திருத்தல் உள்ளிட்ட காரணங்கள் விவகாரத்துக்கு ஏற்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணமான ஓராண்டுக்குள் விவாகரத்து கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் பிரிவில், தந்தையின் சகோதரி மகன், மகள், தாயின் சகோதரரின் மகன், மகள் ஆகிய உறவுமுறை இடம்பெற்றுள்ளது. அதாவது அத்தை, மாமன் முறையில் திருமணம் செய்து கொள்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

பெரும்பாலும் நடைமுறையில் உள்ள ஒரு திருமண பழக்கவழக்கத்துக்கு உத்தராகண்ட் மாநில அரசு பொது சிவில் சட்டம் மூலம் தடைவிதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யுசிசி மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் ஒப்புதல் அளித்ததும், அம்மாநிலத்தில் இது உடனடியாக அமலுக்கு வரும். பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in