விண்ணுக்கும், மண்ணுக்கும் டூர் செல்லத் தயாரான இஸ்ரோ... மறுபயன்பாடு செய்யக்கூடிய விண்கலச் சோதனை வெற்றி!

இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம்
இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம்
Updated on
2 min read

மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்களைத் தயாரிப்பதற்கான இரண்டாம் கட்டச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக மறுபயன்பாடு செய்யக்கூடிய விண்கலங்களின் சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே கடந்தாண்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்த போதும், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அருகே உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் சோதனை காலை 7:10 மணிக்கு நடைபெற்றது.

ஓடுபாதையில் தன்னிச்சையாக தரையிறங்குவதற்கு முன், வாகனம் பல்வேறு சரிப்படுத்தல்களைச் செய்து கொள்ளும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. புஷ்பக் என்று அழைக்கப்படும் சிறகுகள் கொண்ட இந்த வாகனம், இந்திய விமானப்படையின் சின்னூக் ரக ஹெலிகாப்டர் மூலம் தூக்கப்பட்டு, ஓடுபாதையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இதன் பின்னர் புஷ்பக் தன்னிச்சையாக ஓடுபாதையை அணுகி, தேவையான திருத்தங்களைச் செய்து பின்னர் துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது அதன் பிரேக், பாரசூட் லேண்டிங், பிரேக்குகள் மற்றும் நோஸ் வீல் ஸ்டியரிங் சிஸ்டம் ஆகியவற்றின் உதவியுடன் அது நிறுத்தப்பட்டது.

இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம்
இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம்

இந்த பணியின் மூலம் விண்வெளியில் இருந்து திரும்பும் இந்த வாகனம், அதிவேக தரையிறங்கும் நிலைகளை வெற்றிகரமாக உருவகப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது செயல்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடையும் போது, விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி, ஆராய்ச்சிகளுக்கு பிறகு பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வர முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த வகை வாகனங்களை விண்வெளி பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!

முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in