முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!

முன்னாள் முதல்வர் குமாரசாமி
முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தலைவருமான குமாரசாமிக்கு, மூன்றாவது முறையாக இதய அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் குமாரசாமி (64). இதய நோயாளியான இவருக்கு இதயக் கோளாறு காரணமாக, ஏற்கெனவே இரண்டு முறை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மீண்டும் இறுதி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதனையடுத்து மருத்துவ நிபுணர்கள் குழு, நேற்று இரவு இரண்டு மணி நேரம் முயன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. தற்போது ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கும் அவர் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  எதிர்வரும் 25-ம் தேதி மருத்துவமனையில் இருந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குமாரசாமி
குமாரசாமி

இது குறித்து அவரது மகன் நிகில், 'என் தந்தைக்கு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது.  ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள், மஜத தொண்டர்கள் என அனைவரது பிரார்த்தனையின் காரணமாக, அவர் தற்போது நலமுடன் உள்ளார். அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில், மனப்பூர்வமான நன்றி' என்று தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in