அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

நாடு முழுவதும் எதிர்க்கட்சி பிரமுகர்களைக் குறி வைத்து அமலாக்கத்துறை இயங்கி வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள கார்த்தி சிதம்பரம் அவரது நெருங்கிய கூட்டாளி வழியாக வேதாந்தா குழுமத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று அமலாக்கத்துறை  பகிங்கிரமாக குற்றம் சாட்டியுள்ளதால் அவர் மீதான அமலாக்கதுறையின் நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

வேதாந்தா குழுமம் சார்பில் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2022 மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில்  அவரது நெருங்கிய கூட்டாளியான பாஸ்கரராமன் என்பவரையும் சிபிஐ கைது செய்தது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பறிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் கூடுதலாக தகவலை தெரிவித்துள்ளனர்.   'வேதாந்தா குழுமத்தின் தல்வாண்டி சபோபவர் நிறுவனம் சீன ஊழியர்களுக்கு விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்தை அணுகியது. இதற்காக அந்நிறுவனம் அவருக்கு ரூ.50 லட்சம் வழங்கியது. இந்தப் பணம் கார்த்தியின் நெருங்கிய கூட்டாளியான பாஸ்கரராமன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தத் தொகையை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்' என்று அமலாக்கத்துறை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இது தொடர்பான வழக்கில் சிபிஐ ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க,  இன்னொரு பக்கம் அமலாக்கத்துறையும் விரைவில் களமிறங்கும் எனக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in