ஹேக்கர்
ஹேக்கர்

ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து தனிப்பட்ட தகவல்களை திருடும் ஹேக்கர்கள்... மத்திய அரசு புதிய எச்சரிக்கை

இந்தியாவில் ஆன்ட்ராய்டு சாதனங்களை குறிவைத்திருக்கும் ஹேக்கர்களின் சமீபத்திய அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய அரசு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனமான ’இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு(CERT-In)’ ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பல பதிப்புகளைப் பாதிக்கும் அபாயகரமான பாதிப்புகள் குறித்து உயர் தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பாதிப்புகள், ஆன்ட்ராய்டு பயனரின் தனியுரிமை மற்றும் சாதனங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிடில், இந்த பாதிப்புகள் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ஹேக்கர்களால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக செல்போன் அல்லது டேப்லெட்டில் உள்ள தீவிரமான தகவல்கள் திருடு போகும். உள்நுழைவுச் சான்றுகள், நிதித் தகவல் தொடர்புகள், இணையத்தில் உலாவியதன் வரலாறு போன்ற தனிப்பட்ட தரவுகள் இதில் அடங்கும்.

ஹேக்கர்
ஹேக்கர்

இந்த பாதிப்புகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் நமது ஆன்ட்ராய்டு சாதனத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை தொலைவில் இருந்தபடி பெறலாம். தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவவும், பயனர் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மற்றும் தங்கள் விருப்பப்படி தரவுகளை திருடவும் நேரிடலாம்.

அடுத்தபடியாக ஹேக்கர்கள் நமது செல்போன் அல்லது டேப்லெட்டின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கவும் செய்யலாம். மோசமான சூழ்நிலையில், இந்த பாதிப்புகளை பயன்படுத்திக் கொள்வது, ஆன்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்த முடியாததாக மாற்றலாம் அல்லது நிரந்தரமாக சேதப்படுத்தலாம்.

குறிப்பிட்ட வரிசையிலான ஆன்ட்ராய்டு பதிப்புகள் இந்த வகையில் ஹேக்கர்கள் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஆன்ட்ராய்டு 12, ஆன்ட்ராய்டு 12 எல், ஆன்ட்ராய்டு 13, ஆன்ட்ராய்டு 14 ஆகியவை இவற்றில் அடங்கும். நமது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்பாட்டில் இருக்குமெனில், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக பயனர்கள் தங்கள் சாதனத்தின் மென்பொருளை அவசரமாகப் புதுப்பிக்குமாறு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. கூகுள் ஏற்கனவே பாதிப்புகளுக்கான தீர்வை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. "முடிந்தவரை ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்குமாறு அனைத்துப் பயனர்களையும் ஊக்குவிக்கிறோம்" என்று தனது அதிகாரப்பூர்வ குறிப்பில் கூகுள் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்
ஹேக்கர்

சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகள் கிடைத்தவுடன் அவற்றைப் பெறவும், நிறுவவும் நமது சாதனத்தில் தானியங்கி புதுப்பிப்புகள் இயக்கத்தில் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். தானியங்கு புதுப்பிப்புகள் இயக்கப்படவில்லை எனில், செட்டிங்ஸ் பகுதியில் சென்று அதனை அப்டேட் செய்ய வேண்டும். இவற்றுக்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான செயலிகள் தரவிறக்குவதை தவிர்ப்பதும் நல்லது. கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்து நிறுவவும். நம்பத்தகாத இணையதளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in