சுட்டெரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடை வெயில் அதிகரித்து வருவதால், சென்னை மற்றும் மதுரையில் பகல் நேரத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், திறந்தவெளியில் பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர், வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்
சுட்டெரிக்கும் வெயில்

முக்கியமாக, வெயில் உக்கிரமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரையில் திறந்தவெளியில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருவதால் அவர்கள் அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில், வடமாநில தொழிலாளி ஒருவர் ஹீட் ஸ்டோராக்கால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். வெயில் காரணமாக மக்கள் அனைவரையும் மதிய வேலைகளில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பத்திற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையை மதிய நேரத்திற்கு பதிலாக இரவு நேரங்களில் பார்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் 4 மணி வரை எந்த வகையான திறந்த வெளி கட்டுமானப்பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த அறிவிப்பு, தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in