கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

அமலாபால்
அமலாபால்

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் நடிகை அமலாபால் கலந்து கொண்டு ரேம்ப் வாக்கில் அசத்தியுள்ளார்.

நடிகை அமலாபால் கோவாவை சேர்ந்த தொழிலதிபர் ஜெகத் தேசாயுடன் கடந்த வருடம் திருமணம் முடித்தார். அடுத்த சில வாரங்களிலேயே, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வருகிறார் அமலாபால். மேலும், கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதை வலியுறுத்தியும் வருகிறார்.

அமலாபால்
அமலாபால்

அந்த வகையில், இப்போது கர்பிணிகளுக்காக நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோ ஒன்றில் ரேம்ப் வாக் நடந்து அசத்தியுள்ளார். அதாவது, பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது வெள்ளை நிறத்திலான ஏஞ்சல் கவுன் போன்ற உடை அணிந்து மேடையில் ரேம்ப் வாக் வந்து அசத்தினார் அமலா பால். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற 105 கர்ப்பிணிப் பெண்களும் இதே நிறத்திலான உடையே அணிந்து வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரத்தை ’வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்’ கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in