வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன்? - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம்!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதிலளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள் 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் வரிசையாக நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

இன்று அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்த நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தன. கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது பரபரப்பை உருவாக்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னையில் விளக்கம் அளித்தார். அப்போது, “வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என்பது ஒவ்வொருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்களினால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். செப்டம்பர் முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை சரிபார்த்தல் சேர்த்தல், நீக்கல் செய்துள்ளோம். அப்போதே சரி பார்த்துக்கொண்டிருந்தால் கடைசி நேரத்தில் அவர்களுக்கு இது போன்ற நிலை வந்திருக்காது. இது குறித்த புகார்களை பெற்றுள்ளோம். அதுகுறித்து உரிய விசாரணை நடத்துவோம். ’ என அவர் தெரிவித்தார்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

மேலும், பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தின் மீது வைத்துள்ள புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அது குறித்து அங்குள்ள அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார். மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர் கைது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 49MA படி வாக்குச்சாவடி அலுவலரிடம் அவர் கோரிக்கை வைக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in