#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

காமதேனு

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு செய்த ரஜினிகாந்த்.

சென்னை தேனாம்பேட்டை அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார். 

திருவான்மியூரில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்குப்பதிவு செய்தார்.

ரஷ்யாவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மதியம் 12.30 மணியளவில் வாக்களித்தார்.

சென்னை, டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் தனுஷ். 

மனைவி ஆர்த்தியுடன் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் காலை 7 மணியளவில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

நடிகர் விஜய்சேதுபதி சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மதுரையில் நடிகர் அமீர் இன்று வாக்குப்பதிவு செய்தார்.

கோட்டூர்புரத்தில் 8 மணியளவில் நடிகர்கள் ராதிகா, சரத்குமார், வரலட்சுமி மூவரும் வாக்களித்தனர்.

சென்னை, மந்தைவெளிபாக்கத்தில் நடிகை குஷ்பு, கணவர் சுந்தர்.சி மற்றும் மகள்களுடன் வாக்களித்தார்.

ரஷ்யாவில் ’GOAT' படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் பிரஷாந்த் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

திருவான்மியூரில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்த நடிகர் கருணாகரன்.

சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் நடிகை த்ரிஷா தனது வாக்கை செலுத்தினார். 

நடிகர் யோகிபாபு அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் இன்று காலை, வளசரவாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

சென்னை, அசோக்நகர் பள்ளியில் வாக்களித்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பள்ளியில் மனைவி ஆர்த்தியுடன் வாக்களித்த நடிகர் அருண் விஜய்.

சென்னையில் தனது அக்கா மற்றும் அம்மாவுடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்.

நடிகை ஆண்ட்ரியா இன்று மதியம் சென்னையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

நடிகை சுகன்யா சென்னையில் வாக்குப்பதிவு செய்தார்.

நடிகர் விக்ரம் இன்று மதியம் தனது வாக்கை செலுத்தினார்.