கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

போலீஸார் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு
போலீஸார் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு

கோவையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற திமுக நிர்வாகியை போலீஸார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மட்டுமே அரசியல் கட்சியினர் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுக பகுதிச் செயலாளரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீஸார்
திமுக பகுதிச் செயலாளரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீஸார்

மேலும் தங்களது சின்னம் உள்ளிட்டவற்றை காட்டி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் பகுதியில் திமுகவினர் பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவர், வாக்காளர்களிடம் தங்களது கட்சியின் சின்னத்தை காட்டி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸாருடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்
போலீஸாருடன் திமுகவினர் கடும் வாக்குவாதம்

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பிற கட்சியினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் நவீன்குமார் தலைமையிலான போலீஸார் சென்று, கட்சி சின்னங்களை காட்டி வாக்கு சேகரிக்கக்கூடாது என திமுகவினருக்கு அறிவுறுத்தினர். அப்போது பாக்யராஜ் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் போலீஸார் அவரை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in