இந்தியப் பெருங்கடலில் 'கள்ளக் கடல்' நிகழ்வு... கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் 'கள்ளக் கடல்' நிகழ்வு... கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் 'கள்ளக் கடல்' எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்விதமான அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. திருடனைப்போல சற்றும் எதிர்பாராத தருணத்தில் இது வரும் என்பதால் கேரள மக்கள் இதை, ’கள்ளக்கடல் நிகழ்வு’ என அழைக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவே இப்படி ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ’இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்’ எனச் சொல்லி இருக்கும் அந்த மையம், இதன் காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே காரணங்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக் கையும்,விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்,  படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in