உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்
தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாடு-கேரளா எல்லையான வாளையார் உட்பட கோவையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இயங்கி வரும் சில கோழிப்பண்ணைகளில் வாத்துகள், அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில், எச்5என்1 என்ற பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவைகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்
தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்

கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் பரவியதை அடுத்து, தமிழ்நாடு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக தேர்தல் காரணமாக இரு மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. அவர்களுடன் இணைந்து கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டில் நேற்று வாக்குப் பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தற்போது கேரளாவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக போலீஸார் அம்மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்
தமிழ்நாடு-கேரளா எல்லையில் பறவைக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்

இதையடுத்து இன்று முதல் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து கால்நடை பராமரிப்பு துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்து செல்லும், கோழி இறைச்சி மற்றும் கோழித் தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கோழி மற்றும் கோழி இறைச்சி ஆகியவை எடுத்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

விண்ணதிர நமச்சிவாய முழக்கம்... தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

சினிமா பாணியில் சிறையில் பயங்கரம்... இரு தரப்பினர் மோதலில் 2 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in