ஆந்திராவில் போட்டியிடும் அமைச்சர் ரோஜா திருத்தணியில் மகனுடன் மனமுருக வழிபாடு... வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம்
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம்

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பிரபல திரைப்பட நடிகை ரோஜா, மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் அவர் 4வது முறையாக போட்டியிடுகிறார்.

இதனை முன்னிட்டு இன்று இந்த அந்த தொகுதியில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு அவர் இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

மகனுடன் அமைச்சர் ரோஜா தரிசனம்
மகனுடன் அமைச்சர் ரோஜா தரிசனம்

மகனுடன் திருத்தணி கோயிலுக்கு வந்த அமைச்சர் ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது வேட்பு மனுவை மூலவர் முருகப் பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

அப்போது அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான செல்வ விநாயகர் கோயிலிலும் வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சர் ரோஜா எடுத்துச் சென்றார்.

வேட்புமனுவை முருகப்பெருமான் சிலை முன்பு வைத்து வழிபாடு
வேட்புமனுவை முருகப்பெருமான் சிலை முன்பு வைத்து வழிபாடு

ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in