அதிகாரிகளைப் பார்க்க வேண்டாம்... மனுக்களை பெட்டியில் போட்டாலே வேலை நடக்கும்!

மனு போடும் பெட்டி
மனு போடும் பெட்டி

மறு அறிவிப்பு வரும் வரை, மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்காது எனவும், பொதுமக்கள் தங்கள் குறை தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள பெட்டியில் போடுமாறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

இந்தியாவின் 18 -வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 - ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். இந்தியா முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 -ம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

தமிழ்நாட்டில் திங்கள் தோறும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெறும். ஆனால், இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் குறை தீர்ப்பு முகாம்களை நடத்த முடியாது. எனினும் பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்லலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறித்தி உள்ளார்.

இந்தப் பெட்டியில் போடப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in