மூதாட்டி நீலாம்பூர்
மூதாட்டி நீலாம்பூர்

90 வயது மூதாட்டி பெருங்குடலில் 2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்: அரசு மருத்துவர்கள் சாதனை

90 வயது மூதாட்டி வயிற்றில் இருந்த இரண்டரை கிலோ புற்றுநோய் கட்டியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குருபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாம்பூர். 90 வயதான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.

அகற்றப்பட்ட கேன்சர் கட்டி
அகற்றப்பட்ட கேன்சர் கட்டி

அப்போது மூதாட்டியின் வயிற்றின் பெருங்குடலில் புற்றுநோய் கட்டி இருப்பதை மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2.30 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 2 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி மற்றும் அதன் கழிவுகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி எடுத்தனர். இதன் மூலம் மூதாட்டிக்கு மறுவாழ்வு அளித்தனர் மருத்துவர்கள். தற்போது மூதாட்டி நீலாம்பூர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in