மசூதியை இடித்து கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை... அடுத்த சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்
இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்
Updated on
2 min read

அயோத்தியில் மசூதியை இடித்து கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என தெரிவித்திருப்பதன் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார்.

இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்
இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்

சேலத்தில் வரும் 21-ம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு இன்று தொடங்கி வைத்தார். இதில், திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்
இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய உதயநிதி, “ இந்த சுடர் சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் வழியாக 316 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20-ம் தேதி அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடையும். அங்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கையில் இந்தச் சுடர் ஒப்படைக்கப்படும்” என்றார். சுடர் ஓட்டத்தை வரவேற்க, அந்தந்த மாவட்டங்களில், மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்
இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்

இந்நிலையில், “ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை அரசியலாகப் பார்க்ககூடாது” என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ”அது அவர்களின் விருப்பம். கலைஞர் கூறியது போல், திமுகவினர் எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!

போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!

1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

அயோத்தி ராமரை பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்னேஷ்சிவனுக்கு டாட்டா பை... பை... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in