1265 கிலோ எடையில் பிரமாண்ட லட்டு... அயோத்தி ராமர் கோயிலுக்கு சாலை வழியாக அனுப்பப்படுகிறது!

பிரமாண்ட  லட்டு
பிரமாண்ட லட்டு

அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக 1265 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட லட்டு ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில்
ராமர் கோயில்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்ற நபர், அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவதற்காக 1,265 கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்துள்ளார்.  இதனை சாலை வழியாக  விரைவில் அயோத்திக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். இந்த லட்டு குளிர்பதன பெட்டியில் வைத்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த லட்டுவை தயாரித்துள்ள நாகபூஷன்  ரெட்டி,  "நான் கடந்த 24 வருடங்களாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின் போதே  கும்பாபிஷேகம் நடைபெறும் போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி  பூமி பூஜை தொடங்கிய நாளிலிருந்து தினமும் ஒவ்வொரு கிலோ லட்டு தயாரித்து வந்தோம். மொத்தம் 1265 கிலோ கொண்ட பிரமாண்ட  லட்டுவை தயாரித்துள்ளோம்.  இந்த பணியில்  30 பேர் ஈடுபட்டனர். இதனை அயோத்தி ராமருக்கு காணிக்கையாக செலுத்த உள்ளோம். அதற்காக  குளிர் பதன பெட்டியில் வைத்து பாதுகாப்பாக சாலை மார்க்கமாக அயோத்திக்கு கொண்டு செல்ல உள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in