போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் ஒத்திவைப்பு... நாளை பணிக்குத் திரும்புகிறார்கள்!

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன

வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கின. இன்று 2-வது நாளாக நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 400-க்கும் மேற்பட்டோர் பல்லவன் இல்லம் முன்பாக திடீரென தடுப்புகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்லவன் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்

இதற்கிடையே, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார்.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு இன்று வழக்கை விசாரித்தனர். அப்போது, “பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது ஏன்? பண்டிகை காலத்தில் ஸ்டிரைக் முறையற்றது. தமிழக அரசும், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களும் ஏன் பிடிவாதமாக உள்ளன?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

போக்குவரத்து கழக பணிமனை
போக்குவரத்து கழக பணிமனை

மேலும், “நகரத்தில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரிக்கான அகவிலைப்படியை வழங்க முடியுமா?” எனக் கேட்டு அரசு மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று பகல் 2.15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை வரவிருக்கிறது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!

பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!

இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in