குழுக்களை அமைத்தார் அண்ணாமலை... ஹெச்.ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு!

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்க்கொள்ள அமைக்கப்பட்டுள்ள மேலாண்மை குழுக்களின் பட்டியலை அண்ணாமலை இன்று வெளியிட்டார். இதில் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை யாத்திரை
அண்ணாமலை யாத்திரை

மக்களவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் ஒருங்கிணைப்பு என தேர்தல் பணிகளுக்கான குழுக்களையும் கட்சிகள் அமைத்து வருகின்றன. முன்னதாக திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிக்கான குழுக்களை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், தமிழக பாஜகவும் தேர்தல் மேலாண்மைக் குழுக்களை அமைத்துள்ளது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இதில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, எம்.நாச்சியப்பன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அலுவலக குழுவில் அமர் பிரசாத் ரெட்டி, மாலா செல்வகுமார், காயத்ரி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அலுவலக மேலாண்மை குழுவில் எம்.சந்திரன், பிரமிளா சம்பத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஊடக குழுவில் ரங்கநாயகுலு, எஸ்.என்.பாலாஜி, எம்.ஜெயகுரு, செளமியா ராணி பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்பி-க்கள் கே.பி.ராமலிங்கம், எஸ்.கே.கார்வேந்தன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக மொத்தம் 38 குழுக்களை அமைத்திருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தேர்தல் அலுவலகம் திறப்பு
தேர்தல் அலுவலகம் திறப்பு

முன்னதாக இன்று சென்னை அமைந்தகரையில் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. இன்டர்நெட், கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in