அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்?: இமாச்சல் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.
மகன் வெற்றியுடன் சைதை துரைசாமி.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றியின் நிலைமை என்ன ஆனது என்று கேள்வி எழுந்துள்ளது.

சைதை துரைசாமி
சைதை துரைசாமி

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனத் தலைவராக உள்ளவர் சைதை துரைசாமி. இந்தஅமைப்பு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது.

அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினிடம் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை மேயரானார்.

விபத்து
விபத்து

சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான சைதை துரைசாமிக்கு வெற்றி என்ற மகன் உள்ளார். இவர் கார் மூலம் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அம்மாநிலத்தின் காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தது.

அப்போது கார் அருகே இருந்த சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் காரில் இமாச்சல பிரதேசத்துக்கு பயணித்துள்ளார்.

இந்த விபத்தில் அவரும் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுடன் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும் காணவில்லை.

இந்த விபத்தின் போது அவர் காரில் இருந்தாரா அல்லது வேறு எங்கும் சென்றாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனாலும், சட்லஜ் நதியில் வெற்றியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா சென்ற இடத்தில் சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in