நாளை மறுதினம் இந்த வருட கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால், ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை நான்காயிரம் ரூபாயாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் காரணமாக அண்மைக்காலமாக மல்லிகை பூவின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. சாதாரண நாட்களில் 500 ரூபாய் அளவில் விற்கும் மல்லிகைப்பூ பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் 4000 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள்(டிச.15) சுப முகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மல்லிகை பூவின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 3500 ரூபாயாக இருந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிக அதிகபட்சமாக கிலோ 4000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் இன்றைய விலை 2000 ரூபாயாக உள்ளது. இங்கு பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையும், முல்லைப்பூ கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!
அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!
விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!
200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்
19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!