விஜய் முதல் குஷ்பு வரை... சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பிரபலங்களின் வாரிசுகள்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் இதற்கு முன்பு விஜயுடன் ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதன் பிறகு சினிமா தொடர்பான படிப்பு முடித்தவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் இவரது முதல் படம் வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதி மகன் சூர்யாவும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

அனல் அரசு மாஸ்டர் இயக்கத்தில் இவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற புது படத்தில் நடிக்கிறார். இதன் பூஜை சமீபத்தில் நடந்தது.

நடிகர் முரளியின் மகன் அதர்வா சினிமாவில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்க அடுத்த வாரிசும் தற்போது களமிறங்குகிறது.

அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் இவருக்கு ஜோடி. அடுத்ததாக, லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா2’விலும் இவர் பெயர் அடிபடுகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகளாக திரைத்துறையில் அறிமுகமானார் வனிதா. இப்போது இவரது மகள் ஜோவிகாவும் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

நடிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ள ஜோவிகா தற்போது இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக உள்ளார். பிக் பாஸ் மூலம் ரசிகர்களுக்கு தனது மகளை அறிமுகப்படுத்தினார் வனிதா.

எண்பதுகளில் முன்னணி நடிகையாக கோலோச்சியவர் குஷ்பு. தற்போதும் படங்கள், அரசியல், தயாரிப்பு என பிஸியாக இருப்பவர் தனது மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

பெரிய மகள் அவந்திகா நடிப்பு தொடர்பான படிப்பு படித்து வர, இளையமகள் அனந்திகா கமல்-மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சும் மலையாள நடிகைகள்...இதில் யாருடைய கேரக்டர் உங்களுக்குப் பிடிக்கும்?