டாஸ்மாக் (கோப்பு)
டாஸ்மாக் (கோப்பு)

நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.400 கோடி... தேர்தலையொட்டி களைகட்டிய வியாபாரம்!

டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்காக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த விற்பனை நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று மதியம் முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மது
மது

இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது, ‘நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும், நேற்று இரண்டரை மடங்கு அளவுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருந்தது’ என்று தெரித்தனர்

டாஸ்மாக் விலை உயர்வு
டாஸ்மாக் விலை உயர்வு

வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது மதுபான விற்பனை ரூ.100 கோடிகளுக்கு மேல் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 400 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளதாலும், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாலும், சட்டவிரோதமாக மதுபானத்தை பதுக்கி யாரேனும் விற்பனை செய்கிறார்களா என்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in